காவலன் பாண்டியன் ஒற்றன் பாண்டியன் ஒற்றன் பாண்டியன் காட்சி 20 கடம்பனும் வழுதியும் காழகப் போர்க்குக் கடிதிற் செல்கெனக் கழறினன் வேந்தே. வாழிய வேந்தே வாழ்கநூம் கொற்றம் காழக ஒற்றர் கடுகி வந்துளர்; விரைவில் வரவிடு . . . வேந்தே வாழ்க திரைகடற் கப்பாற் செங்கோ லோச்சும் காழக வேந்தன் கடுங்கட் சீயன் தோழமை மறந்து தொன்று முதலாச் செலுத்துந் திறையுஞ் செலுத்த மறுத்து வலுத்த படையும் வகுக்க முயன்றுளன்: ஒஒl அவனோ உறுபகை கொண்டனன்? காவா நிலையனோ கடும்போர் நினைந்தனன்? ஈங்கொரு போரில் ஈடுபட் டோமென ஆங்கவன் அறிந்தே ஆர்ப்பரித் துளனால் மலைக்கோன் துணையால் மனச்செருக் குற்று.இந் நிலைக்கவன் துணிந்து நேர்ந்துளன் வேந்தே வலியறி யாற்கு வலிமை காட்டுதும் புலிநிகர் கடம்ப புறப்படு வல்லே முளையிற் கிள்ளுக முண்மரம் அதனை வழுதியும் துணையா வருவன் செல்க: (கடம்பன் மலைத்து நிற்க) மலைத்தனை முகமும் மாறினை என்கொல்?
பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/122
Appearance