இளம்பெருவழுதி படைஞன் 2 படைஞன் 1 படைஞன் 2 பாண்டியன் படைஞன் 1 மாதேவி பாண்டியன் மறவன் 1 செங்கட் சீயன் சினந்தெழு படையும் வங்கம் ஊர்ந்த நம்மவர் படையும் கரியெனப் புலியென அரியெனப் பொருதன வெருவுறு பொருகளம் குருதியின் நிறைந்தது. கணிக்க இயலாக் கடும்போர்க் களத்தில் அணிக்கன்னி மோதின அனற்பொறி வீசின. வழுதி சீயன் வாள்கள் மோதின புழுதி யெழுந்துவான் பூசி மறைத்தது பொழியுங் குருதி பூமியை மறைத்தது . வெங்கட் சீயன் வியனகல் மார்பிற் செங்கணை வழுதிவாள் சீறிப் பாய்ந்தது காழகன் கூர்வாள் காளை வழுதியின் தோளிற் பாய்ந்து தொட்டது . - - - ஆ; ஆ சாய்ந்தனன் சீயன் ஒய்ந்தனன் வழுதி பாய்ந்து சிதறின காழகப் படைகள்: பொல்லாக் களவாற் புழுவெனத் துடித்து நில்லா தொருநிலை நெஞ்சம் அழுங்கினென் சுமந்த வயிற்றிற் சுவைப்பால் வார்த்தீர் தவந்தான் செய்துளேன் தாய்மனங் குளிர்ந்தது. அடாது செய்தவன் அழிந்தனன் போபோ (இடையில் மறவர் சிலர்வர) மறக்குடிப் பிறந்தீர் வருக வருக புறத்துறை முற்றும் புலிகாள் வருக பகைவற் பணித்த பாங்கினை மொழிக கடாரப் படையைக் கடந்தது போல விடாது வீசும் வியனலை கடந்து கடலின் நாப்பண் கலத்தொடு மீண்டனம்; சீயன் படைகள் சீறிப் பாய்ந்தெனக் 295
பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/125
Appearance