பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 காயுங் கடுங்கால் கனன்றுடன் தாக்கப் பாயுறு கலங்கள் பதறின சிதறின. இருளிடை விழியிலார் இயங்குதல் போல மருளோ டாங்கண் மரக்கலஞ் செலுத்தினம்; ஆடல் முற்ற ஆடிய பெருவளி சாடித் தொலைத்துச் சற்றே ஒய்ந்தது. பாண்டியன் : கலத்திடை ஊர்ந்தீர் கடுங்கால் தப்பி நிலத்திடை யாங்ங்னம் நெடுங்கரை யேறினிர்? மறவன் 2 கல்பொரு துராயக் கைகா லிழந்தோர் பல்பொழு துணவிலோர் பசித்தோர் கடலிடை மிதந்தனர் வதைந்தனர் மீளாத் துயரினர்; சிதைந்த கலத்திற் சிதறி வீழ்ந்தோர் இரைகடல் மூழ்கித் திரிதரு பெருமீன் இரையென ஆகியோர் எண்ணிலர் ஆங்கண் உடைமரம் பற்றி உய்ந்தோர் அலையால் அடைகரை யேறி அயர்ந்தோர் சிலர்சிலர்: பாண்டியன் : அம்மஓ! அம்மஓ! ஆழ்துயர்க் கடலுள் நம்மையும் வீழ்த்தி நடுக்கிய திதுவே: மானங் காத்தஎன் மைந்தன் எங்கே? (எவரும் வாய்திறாவாதது கண்டு) ஏனிங் கெவரும் எழுசிலை யானிர்? எங்கே வழுதி? ... . மறவன் 1 : --- ---- யாங்ங்ணம் மொழிகுவம், கடலுண் மாய்ந்தார்! ... ... நாகனார் : . . கடிய திம்மொழி வாரியிற் கலவா வையை மைந்தன் ஆருயிர் தன்னை வாரி கவர்ந்ததோ (பாண்டியன் மயங்கிவிழ) மன்னன் ஒ ஓ மயங்கினன் வருக,