பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி பாண்டியன் மாதேவி (மயக்கந் தெளிந்தெழுந்து) வென்றாளுந் திறனுடையாய் வீறுகொளுந் திருநாட்டை நின்றாளும் நிலைபெறுவாய் எனவன்றோ நினைந்திருந்தோம்; வென்றாயோ எமைவிட்டுச் சிறுவளிக்கோ தோற்றனைநீ? ஒன்றாலும் இனித்தெளியோம் உளமழிந்தே வதங்குகிறோம்! முத்தெடுத்த காரணத்தால் முரணியெங்கள் நல்வயிரச் சொத்தெடுத்துப் போயினையோ? சூழ்ந்தெமது முத்தமிழின் வித்தெடுத்துப் போயினையோ? வெறுப்பேறி எமதுயிரின் கொத்தெடுத்துப் போயினையோ? கூறாயோ? பாழ்கடலே: காவலன்றன் மைந்தனெனக் கண்குளிர வந்தவனே பாவலனாய் வளர்ந்துவரல் பாரத்துமணம் பூத்ததடா: பூவரும்பு தானுதிரப் புயல்வலிந்து வீசியதால் நாவுலர நெஞ்சுலர நலிவுழந்து புலம்புகிறோம்: வயிறுனையே சுமந்ததடா மாகடலுள் நீமாய்ந்த துயரைமனம் சுமந்ததடா: தொடர்திங்கள் ஈரைந்தில் வயிறுகமை குறைந்ததடா: 'மகனே என் மனச்சுமைதான் உயிருளநாள் வரைகுறைய ஒருவழிதான் உளதோடா: 297