நாகனார் காட்சி 22 வழுதி குழலி மாய்விற் கிரங்கி அழுது புலம்பும் அவைக்களப் புலவர்பால் மகவிழந் துழலும் மன்னன் சார மிகுபுல நாகர் வேண்டுவ கூறி மனப்புண் ணாற்றி இனிப்போர் வேண்டா எனப்பல விளம்பி இசைவித் தனரே. (வழுதியும் சூழலியும் மாய்ந்ததை எண்ணித் தமதில்லில் தனித்திருந்து புலம்புகிறார்) (1) பாண்டியனார் குலக்கொழுத்தே பாடல் சான்ற பைந்தமிழின் தவக்கொழுந்தே பண்ப னைத்தும் ஈண்டியவோர் செயலகமே எடுக்கும் போரில் இணையில்லாப் புறப்பொருளே எழிலின் தோற்றம் பூண்டிருந்த நல்லுருவே எனது நெஞ்சட் பூத்திருந்த பொன்மலரே புலம்ப விட்டு மாண்டனையோ நன்மகனே கொடுமை தாளா மனங்கலங்கிப் புலங்கலங்கி மாள்கின் றேனே (2) மனமுடைந்தேன் முன்னொருநாள் மாளாத் துன்பம் மனத்துறினும் நிலையாமை உணர்ந்த என்றன் அகமுடைந்து போகாமல் ஆற்றி நின்றேன்: அரியதமிழ்ப் பாதல்கும் ஆற்றல் சான்ற தகவுடையோய் நினையிழ்ந்த இன்றோ துன்பந் தாளாமற் புலம்புகின்றேன் கலங்கு கின்றேன் அகவுதமிழ் அன்னையடா வாடு கின்றாள் அழகுமிகு பாமகனை யிழ்ந்த தாலே:
பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/129
Appearance