கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 (3) கொழுநனென மனங்கொண்டு மணங்கா னாது கோமகனை விழ்ந்தவளே குழலி நானிங் கழுதிடவோ நின்னுயிரை அழித்துக் கொண்டாய்? அம்மாநீ பொருண்மொழியுங் காஞ்சி பாட வழுதியுமப் பொருண்மொழியே பாடி நின்றான்: வாழ்க்கையிது காஞ்சியென முன்னு ணர்ந்தோ மொழிபுகன்றீர்? ஒருபொருள்மேல் ஒன்றி நின்றீர்? முடிவிலுமோ இருவிரும் ஒன்றல் வேண்டும்? (4) ஒன்றுமுளங் கொண்டவளே உவமை யின்றி உயர்ந்தவனே! நல்லவனே உன்னை மாலை மன்றவிடைப் பெருவழுதி குட்டும் நாளில் மணவாழ்த்துப் பாடுதற்குக் கனவு கண்டு நின்றளனைப் புலம்பவிட்டுச் சென்றா யம்மா/ நெஞ்சமெலாம் எரிகிறதே! யாது செய்வேன்? கொன்றனைய கொடுமையிது தாங்கா திங்குக் குழம்புகிறேன் வெதும்புகிறேன் தேம்பு கின்றேன்! (தேம்பும் ஒலிகேட்டுத் திரும்புகிறார் புலவர். அரசன் அழுத கண்ணொடு அருகில் நிற்க) நாகனார் : கயல்தவழ் கொடியோய் களமர் உழக்கும் வயல்கெழு நாட்டின் வளங்கொளும் வேந்தே மயல்தரு நிலையில் வடிநீர் விழியோடும் துயர்படர் முகத்தொடும் தோன்றுவ தென்கொல், பாண்டியன் ஆறாத் துயரில் அழுந்தும் புலவீர் தேறா மனத்தொடு திருமுன் வந்தேன் மறக்குல மைந்தன் மாய்ந்த துயரம் மறக்க லாற்றேன் மனந்திறந் துரைத்தேன் வேதனை யகற்ற விழைந்திவண் வந்தேன் நோதலும் புலம்பலும் நும்முழை நோக்கி வேதனை கூர்ந்து விம்முத லுற்றேன் ஒருவர்க் கொருவர் உறுதுணை யிலேமாய் இருவரும் கலங்கின் தேற்றுவ தெவரோ?
பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/130
Appearance