பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி நாகனார் பாண்டியன் நாகனார் பாண்டியன் நாகனார் பாண்டியன் மன்னவ கலங்கேல் மனமென ஒன்று துன்னுதல் உளதால் இந்நிலை பெற்றோம். பிறப்பும் இறப்பும் பேரா இயற்கை; இறப்பின் வரூஉம் இப்படர் களைய மறப்பெனும் ஒன்றே மாமருந் தாகும்: ஒருமகற் பிரிவான் உழல்வேன், துயரின் ஒருவுதல் யாங்ங்ணம்? உளமொன் றிலனேல் மறதி பெறுவன் . . 畢暉畢 畢畢語語語語 மன்னவ மைந்தர் ஒருவர் பலரென் றோருமோ இறப்பு? நெருநல் இருந்தார் இன்றிலை யென்னும் பெருமை யுணராது பேசுதல் நன்றோ? மகற்பிரி துயரம் மாற்றுத லென்பது பகற்கன வெனயான் பட்டறிந் துளென்முன் மகனை நினையேல் மக்களை நினைநீ அகலும் அத்துயர் அணுஅணு வாக; நிலையா வுலகம் இதுவென நினைப்பினும் இளையான் இவற்கோ இறப்பிங் குறுவது? இளமை முதுமை ஆண்மை பெண்மை வளமை வறுமை அறிவறி யாமை வரைப்பறி யாது வாரும்அக் கூற்றம்: இறப்பின் திருமுன் எல்லாம் சமமே. பூப்பன யாவும் காய்ப்பன வல்ல காய்ப்பன யாவும் கனிவன வல்ல; பூவும் பிஞ்சும் பொலிவுறு காயும் மேவுங் கனியும் வீசும் வளியால் உதிர்தல் உண்டுநீ உணராய் கொல்லோ? காவலன் மைந்தன் பாவலன் ஆகினன் பாவலன் அவனோ சாவுல கேகினன்? 301