பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 பாண்டியன் வேண்டேன் ஐய விழித்ததென் னுணர்வு தாண்டேன் நும்சொல் தலைமேற் கொள்ளுவேன்; நாகனார் : நின்மகற் பிரிந்து நிலைகுலை வுறல்போற் நம்மகற் பிரிந்த தந்தையர் நிலைநினை: பாண்டியன் : இழப்பின் துயரம் இனைத்தென உணர்ந்தேன் பிழைக்கும் நல்வழி பேணுவென் உரையின், நாகனார் முடிகெழு வேந்தர் மூவரும் ஓரினம் அடிதொழு தாரும் அரசரும் ஓரினம் ஒருவர்க் கொருவர் முரணுவி ராயின் பொருசமர்க் களத்துப் பொன்றுவ தெவ்வினம்? நும்முடி பகைகொளின் வம்பலர் புகுந்து தும்பை சூடத் துணிகுவர் எளிதே இனத்தின் ஒற்றுமை மனத்திற் கொள்க முனைப்பினை விடுக முரணுதல் தவிர்க அமராக் கிப்பகைத் தவர்நிலங் கொள்து மதராக் கிப்பிணித் தவர்மனங் கொள்க: நாட்டை யாரும் நன்மகன் ஒருவனை வீட்டிய கொடும்போர் விடுவிடு இனியே பாண்டியன் அழிவுகள் தொலைக அமைதி நிலவுக பழிசெயும் போரினிப் பரவா தொழிக நேரிலாப் புலவீர் நிகழ்த்துதும் மொழியாற் போரிலா வுலகம் பூத்துக் குலுங்க ஆவல்மீக் கூர்ந்தனென் ஆவன புகல்க. சாவினை நல்கும் சமரினி யொழிய மேவும் நல்வழி மேம்பட மொழிக நாகனார் திருந்துநன் னெறியிற் பொருந்துளம் உற்றோய் வருந்துதல் தவிர்க வாழ்கநின் னுள்ளம்: அனைத்து வேந்தரும் வருகவென் றழைத்து நினைத்தது மொழிக தினைத்துணை யளவும் நடுவிற் பிறழாது நயந்து கெடுபோர்