பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி * [. 85 இளைஞன் : இரக்கம் ஒன்றிலா தினக்கொலை செய்து புரக்கும் கொடும்கோற் புன்சிங் களவன் கொடுமை தாளாது குடிபெயர்ந் தோடும் இலங்கைத் தமிழர் ஈன்றதம் சிறாரைக் கலங்குங் கடலிடைக் கலத்தின் விடுக்க அலைகவிழ் கலத்தால் அச்சிறார் மாய்ந்தெனக் கொடுங்கோல் மன்னன் கொடுமைதாளாது நடுங்கல் எய்திக் கடலின் நாப்பண் மாய்ந்தனன் சொல்லோ? . . . முதியவர் . . . . . . . மாறாச் செங்கோல் வேந்தன் மைந்தன் வெவ்விடர்ப் படுமோ? இளைஞன் : காதற் றோல்வி கண்டனன் போலும்; முதியர் : சாதற் கதுவும் காரணம் அல்ல; இளைஞன் : வெஞ்சமர்க் களத்து வெந்நிட் டதனால் துஞ்சாக் கடலுள் துஞ்சினள் கொல்லோ? முதியவர் : அஞ்சாத் தறுகணன் அவனோ வெந்நிடும்? இளைஞன் : தறுகணன் எதனால் தற்கொலை விழைந்தனன்? முதியவர் : தற்கொலை எனநீ தவறாக் கருதினை: இளைஞன் : கடலுள் மாய்ந்த காரணந் தான்என்? முதியவர் : கத்து கடற்கண் காளை மாய்ந்த அத்துயர் நினையின் அடிமனம் நடுக்குறுஉம் மாயா திருப்பின் மற்றவன் நமக்கு வியாக் கவிபல ஈகுவன் மன்னோ நண்ணார்த் தேய்த்து நடுக்கடல் மீள்வோன் என்னா நிலைமை எய்தினன்; பாழ்கடல் வழுதி முதலாத் தொழுதகு செல்வம் விழுங்கித் தொலைத்து விழுமம் தந்ததே.