பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 90 வழுதி நாகன Iाiां குழலி நாகனார் வழுதி நாகனார் குழவி கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 எளிய மெல்லொலி இன்னிசை நயத்தே அளிய என்னுளம் அவாவிற் றைய இனிய போலவும் எளிய போலவும் அணுகு பவைதாம் அடிமை கொள்ளும் நண்ணுவ எவையும் நமதாக் கோடல் உள்ளவை மறத்தற் கொருவழி போலும், வந்து புகூஉம் வம்பலர் இசையில் உந்தவாக் கோடல் ஒருகுறை கொல்லோ? வேற்றவர் இசையை விழைவது தவறிலை ஊற்றமும் ஏற்றமும் உவந்ததற் கீந்து மனத்தை யிழந்து மயக்குறிற் பெரும்பிழை இனத்தை மொழியை எளிதில் மறந்து வருவிருந் தோம்பும் வாழ்வினர் தமிழர் பின்னை வருவன பேணுங் காலைத் தன்னை யிழவாத் தகைமை வேண்டும். புகூஉம் ஒன்றதுள் இரண்டறக் கலத்தல் நகூஉம் நிலையொடு நலிவும் நல்கும். (வாடிய முகத்துடன்) உரிய மறத்தல் வருவ புரத்தல் இரிய மனத்துள் உறுதி கொள்ளுவென்; நன்று நன்று நாளை ஆள்பவர் நன்றுந் தீதும் நவையறத் தெளிதல் உரிமை காத்தற் குறுதுணை யன்றோ? எப்பொருள் கேட்பினும் எவர்வாய்க் கேட்பினும் அப்பொருட் டன்மை எத்தக வாயினும் எண்ணித் துணிக இளையோய் அஃதே பண்ணத் தகுநற் பகுத்தறி வென்ப; (வழுதி தலையசைத்து ஒம்புதல் காட்ட) மொழிநலங் காக்கும் முந்தையர் இலக்கண எழிலும் இயல்பும் இயம்புதிர் இனிதே.