பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி வழுதி போர்த்தொழில் புரிந்து நாடு பொலிவுற உயிர்கள் ஈவோர் நாற்படை மறவ ரென்ன நானிலம் நவிலப் பெற்றோர் வேற்படை துளைத்துக் கொல்லும் வெறித்தனம் படைத்தா ரேனும் ஆர்த்தவர் தொடுக்கும் போர்கள் அறநெறி தொட்டே செல்லும் இவ்வணம் மறவர் கூட்டம் இன்னுயிர் ஈந்தும் பெற்றும் தெவ்வரை முருக்கித் தம்மைச் சிதைப்பதிற் களித்து வாழும் செவ்விய நிலத்தி லன்றோ சீர்வளம் விளைந்து தோன்றும் இவ்வியல் அறியா யாகின் எவ்வணம் நாடு காப்பாய்? துஞ்சுதல் தவிர்க நாடு சுமக்கவன் றோள்கள் வேண்டும்: அஞ்சுதல் விடுக நாளை அமரெனில் ஆர்த்தல் வேண்டும்: பஞ்சென யெண்ணி நின்மேற் பகைவரின் பரிவா கொள்வை? எஞ்சுத லின்றிப் போரில் இயல்புகள் யாவுங் கற்பாய் அஞ்சுதல் அணுவு மில்லேன் ஐயநீர் அமைதல் வேண்டும்: வெஞ்சமர்க் கழிதல் வேம்பு மிலைந்தவர் விழைந்த தில்லை; துஞ்சுவோர்க் கிரங்க லன்றிக் துஞ்சுதல் துளியு மில்லேன் எஞ்சிய அனைத்துங் கற்பேன் இனியவை இசைக்க நன்றே.