பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 பாண்டியன் : (கணியரை நோக்கி) நலமுரை கணியீர் நாவசைத் திலீர்நும் உளமெது கருதினும் உடன்வாய் மலர்க கணியன் : பாண்டிய நாட்டில் வேண்டிய பெறுதலின் ஈண்டொரு குறையிலை எனினும் . . . . பாண்டியன் H-H H = H ... எனினும் கருதிய துரையின் கணியர் நும்மொழி விரைவில் நிறைவுறும் விளம்புக விளம்புக: கணியன் : கலங்கேல் மன்னவ காவலன் நலமும் நலங்கெழு கோவில் நலமுங் கருதினென் பாண்டியன் ஒதுமின் ஒதுமின் வேதியர் பெரும யாதுநூம் முளமென அறியும் விழைவினம், கணியன் : முக்கட் செல்வன் முதுபெருங் கோவிலும் தெற்கின் மேய செவ்வேள் குன்றும் வடபால் மேய மாலிருஞ் சோலையும் வடமொழி யோதி வழிபடின் நன்றாம் இடமகல் நம்நாடேற்றமும் எய்துமால், நாகனார் : தென்மொழி யிசைப்பின் தீங்கு வருங்கொல்? கணியன் . நன்மொழி புகன்றீர்; நானது கருதேன் தேவ மொழியெனச் செப்பும் இதனைத் தேவர் உவப்பர் . . . நாகனார் 睡 ■ ■ ■ .... திருமறை வல்லீர் ஒருமொழி தேவன் உவப்ப னாமெனில் அறிவிற் சிறந்தோர் அச்சொல் ஏலார்; பிறமொழி வெறுப்பன் இறைவன் என்ப தறமும் அன்றே அறிவும் அன்றே சீனர் யவனர் சிங்களர் சாவகர் சோனகர் முதலோர் கோநகர் ஈண்டு வாணிகப் பொருட்டா வைகினர் ஈண்டி: