பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி கடம்பன் பாண்டியன் கடம்பன் பாண்டியன் கடம்பன் செம்புலச் நாகனார் கணியன் நாகனார் பாண்டியன் கடம்பன் பாண்டியன் கனவினும் அதுதான் கைவரப் பெறாது தொல்லையிற் சிக்குவர் துணிந்தனர் போலும், எள்ளுதல் தவிர்க முள்மரம் முளையிற் கிள்ளுதல் நன்று . . . . = + = = H = வெள்வே லுடையாய் நிலைப்படை ஆங்காங் கெல்லையில் நின்றுள தலைப்படின் அவன்றான் தப்புத லரிது. விழிப்புட னிருத்தல் வெல்போர்க் கடம்பன் தொழிற்கது துணைசெயும் . . . .... தொழுதுமேற் கொள்ளுவேன் மற்றுமோர் செய்தி மனத்திற் கொள்ளுக கத்து கடல்குழ் காழகன் சீயன் இற்றை நாள்வரை இறைதரும் இயல்பினன் உரிமை வேண்டி உருத்தெழு வான்போல் திரிந்துளன் எனவும் செப்பக் கேட்டணம்: கார்முகில் சூழிற் கழனிகள் விளையும் போர்முகில் சூழிற் பூவுல கழியும்: எடுப்பதுங் கெடுப்பதும் இருமுகிற் குரிய இடித்துரை கூறுதல் எம்மனோர்க் குரித்து: கூறுக யாமுந் தலைமேற் கொள்ளுதும் மாறுகொண் டெழுதல் மற்றவர் தாமே, போர்மேற் கொள்வோர் புறமிட் டோடத் தார்தாங் கணியினர்.நம் தாயகத் துள்ளனர். நன்று நன்று மேவுக நலமே. 203