பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 நாகனார் : (குறுக்கிட்டு எழிலி குழலி எவரே யாகினும் வழுதியின் மனத்தைப் பழுதறத் தெரிந்து செயல்மேற் கொளலே சீர்மைத் தாகும்: பாண்டியன் : கயல்விழி குழலியைக் கடிமணங் கொள்ள அயில்வேல் வழுதி ஆவலன் என்பது செந்தமிழ்ப் புலவர் தெளிகுவர் போலும்: நாகனார் தந்தம் மனம்போல் தக்கோர் மனங்கொளல் முந்தை மரபே. ....... பாண்டியன் : . . . . . . . . . . முரணிலை பெரும, மரபு மீறான் வழுதி யென்பதும் அறிகுவம்; அவன்றான் அரசு நடாத்தும் திறனும் நன்கு தெரிந்துளன் கொல்லோ? நாகனார் : அம்புவி காக்கும் அறிவன் இவனெனச் செம்புலச் சிறையார் செப்பக் கேட்டுளேன்: மாதேவி : நயத்தகு பலனின் நலங்கெழு விதையிடக் கசக்கும் பாகற் கணியோ நல்கும்? வயப்புலி பூனையைப் பயத்தலும் உண்டோ? பாண்யடின் கொடியனென் றெம்மைக் குறிப்பில் உணர்த்தக் கடும்புலி யென்று கழறினை கொல்லோ? மாதேவி : போர்புரி மறவர்க்குப் புலியோ அரியோ நேரெனப் புகல்வர் நேரிழை அறியேன். பாண்டியன் : (மெல்லிய குரலில் அரசியை நோக்கி) - நன்று நன்று நரியெனச் சொலாது நின்றனை வேந்தி, நின்மகள் பெருமை கேட்டலும் உளத்துக் கிளர்ந்தெழும் உணர்ச்சி காட்டினை முகத்தில் கண்மலர் துளிர்த்தன. மாதேவி : சிறுவன் பெரும்புகழ் தெரிந்துளேன். எனினும் -பிறர்சொலக் கேட்டலிற் பேருவப் பன்றோ?