உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 பாண்டியன் போரின் நிகழ்வாற் பொருள்கள் பாழென யாரும் அறிகுவர் யாமும் அஃதே. படையெனும் உறுப்புப் பார்நலங் காக்கும் நடைமுறைக் குரியது நண்ணார் படையெழிற் செங்கள மன்றி எங்குள தொருவழி? நாகனார் மண்ணாள் வேந்தர் மற்றவர் தம்மை நண்ணார் எனமணத் தெண்ணா ராகின் நண்ணா தாகும் நடுக்கிடும் போரே, போரிற் பாழ்படும் பொருளிற் பாதி பாரில் வாழ்நர்க்குப் பயன்படு மாகில் நல்குர வென்னும் சொல்லே யிலதாம்; பாண்டியன் : பாட்டின் கற்பனை கேட்டற் கினியது நாட்டின் காவல் நடைமுறைக் குரியது: நாகனார் : பாடல் சொலும்பொருட் பற்றுதல் கொளாஅது கூடலர் எனப்பகை கொளுமேல் யாண்டும் நாடும் ஏடும் நனிவே றாகும்; நாடிய அன்பே நலந்தரும் வாழியாம்: மறப்போர் மறப்போர் மாநிலங் காக்குந் திறத்தோர் அல்லர் செந்தமிழ் வல்லீர் பாண்டியன் : மெல்லில் மனத்தைச் சொல்லினம் நும்முழை -- பல்கிய அறவுரை பகருதிர் நீவிர்; நாகனார் : பொலந்தார் மார்ப புகழ்ச்சி வேண்டிக் கலந்தோர்க் குறுதி கழறுதல் தவிர்த்து மெய்ம்மை விடுத்துப் பொய்ம்மை கிளத்தல் எய்யா தாகின் றெம்சிறு செந்நா: பாண்டியன் : எம்செவி கைப்பினும் நும்செவி யறிவுறுஉ நெஞ்சிற் கொடூஉம் நீர்மையேம் அறிகுவிர்; நனைமொழி நூம்பால் நவின்றனம் அவைதாம் தகவில எனின்அவை தவிர்க பெரியீர்