பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை காப்பிய நாடகம் எழுதவேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆவல். பேராசிரியர் சிலர், காணுந்தொறும் என் ஆவலைத் துாண்டிக்கொண்டேயிருப்பர். எனினும், எதனாலோ யான் எழுத முனையாதிருந்துவிட்டேன். இப்பொழுது தான் அது நிறை வேறும் சூழ்நிலை ஏற்பட்டு. அச்சூழ்நிலையை, உரு வாக்கிய துணைவேந்தர் இராமச்சந்திரனார்க்கும் நூல் வெளிவரத் துணைநின்ற துணைவேந்தர் சீனி கிருட்டின சாமி அவர்களுக்கும் என் நன்றி. இன்றுள்ள குமுகாயச் சீர்கேட்டை அடிப்படையாக வைத்து எழுதவேண்டுமென்பது என் பெருவிழைவாகினும் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தார் விருப்பிற் கிணங்கிப் பண்டை நிகழ்ச்சியைக் கருவாகக்கொண்டு இந்நாடகம் புனைந்துள்ளேன். உலகப் புகழுக்குரிய 'உண்டா லம்ம இவ்வுலகம்' என்ற பாடலைப் பாடிய கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியைப் பற்றி 1948 ஆம் ஆண்டு ஒரு சிறு கதையெழுதிப் போர்வாள்' என்னும் தாளிகையில் வெளியிட்டேன். அக்கதையையே சில மாற்றம் செய்து நாடகமாக்கியுள்ளேன். பண்டைத் தமிழர் பழக்கவழக்கம், இனம் மொழி நாடு இவற்றிற்பற்று, போர் மறுப்பு இம்மூன்றும் இந்நாடகத்தின் உட்கோளாக அமைய முயன்றுள்ளேன். மதுரையின் முன்னை நிலைகளையறிந்து கோடற்குப் பத்துப்பாட்டும் பரிபாடலும் பெரிதும்துணைநிற்கின்றன. காப்பிய நாடகம் எழுதுவது என் கன்னி முயற்சியே. எனினும் விழிப்புணர்வுடன் செயற்பட்டுள்ளேன். என்னுட் கலந்துறையும்