பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுதி குழலி வழுதி குழலி வழுதி குழலி வழுதி குழலி வழுதி கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 எந்தம் மனையகத் தெழுந்தருள் நினக்குச் செந்தமிழ் சுவைத்துச் சில்பொழு திருக்க வாய்ப்புள தாமோ? வையைத் தலைவ: தாய்ப்பா லருந்தத் தயங்குமோ குழவி? தமிழே இனிமை நின்னிதழ் தருமது அமிழ்தே அமிழ்தே ஆய்குவங் கூடி (தனக்குள்) அரும்புங் காதல் விரும்புங் கொல்? இவன் தருங்குறிப் புரையாற் றடுமாறுளத்தேன். உண்மை யுளத்தை உசாவி யுசாவிப் பெண்மை விழையும் பெற்றிமை யறிகுவென்; (வழுதியை நோக்கி) புறப்பொருள் தேறிய திறத்தினை எனினும் அகப்பொருள் பயிலும் ஆர்வம் அற்றனை பருவத் தன்றிப் பழுப்பது பயனிலை வருமொர் காலம் வழிசெயும் அதற்கு வளர்கலை பெரிது வாழ்நாள் அதற்கு தளருடற் பிணிகள் தாம்பல வாதலில் வல்லே முனைக எல்லையில் இன்பம் நல்கும் புதுப்புது நயங்களும் தோன்றும், ஆமாம் உண்மை அடுத்தடுத் ததனை ஆமாறறிய ஆசாற் சார்குவென்; காலை அரும்பாம் பகலிற் போதாம் மாலை மலராம் மற்றதன் பொருளென்? மொழிந்தஇப் பாடல் முரண்டொடை யாகும். தெளிந்த அறிவினை திசைமாறாது பொதிந்துள நயத்தைப் புகலாய் கொல்லோ? அறிந்த துரைத்தேன் அறியா ஒன்றை விழைந்தனை யாகின் விடைசொல இயலேன், |