பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி குழலி அறியாய் போல ஆண்மையன் நீஎன் பொருகயல் காணாது புலம்புதி பெரும, வழுதி : பொருவரும் எங்கொடி மருவிய கயலை அறிகுவென் பேதாய் அறியா துரைத்தனை: குழலி . வேம்பின் தொடையல் விழையகல் மார்பரின் கூம்பவிழ் இதழ்மொழி வேம்பினுங் கைக்கும்: வழுதி என்மொழி வேம்பெனின் நின்மொழி கரும்பு குழலி : பொன்மொழி புகன்றனை பூவலர் தாரோய்: கரும்பென என்மொழி கருதினை யாகின் விரும்புதி கொல்லோ? இரும்புளம் இனிஏன்? வழுதி : சுரும்பார் குழலி தூயநின் புலமை விரும்பார் எவரோ? விளைதேன் விழையாச் சுரும்பும் உளதோ? . . . . . . . . . குழலி . . . . . . .... சொற்போர் வல்லோய் புலமை விரும்பினை போற்றுமத் தேன்றரும் மலர்வெறுத் தொதுக்குதல் மாண்புறு செயலோ? (அருகிலுள முல்லைக்கொடியைச் சுட்டி) பைங்கொடி முல்லை பைதல் உறல்கான்; வழுதி : தும்பைச் செடியைக் கொம்பெனக் கருதி வம்பப் பூங்கொடி வாடுதல் அறிக குழலி : குறிஞ்சி யிசைக்கக் கோட்டியா ழெடுத்தேன் நெருஞ்சி யாமென நீயதை வெறுத்தி: வழுதி : கவவுயாழ் மீட்டுங் காந்தள் மெல்லிரல் தவறிப் பகைநரம்பு தடவுதல் காண்நீ. குழலி : பெட்பும் பாங்கிற் கட்புல னாகிஎன் உட்புகுந் துயிரொடும் ஒன்றினை அன்று நட்பிற் பிழைசெய நாடினை இன்று: வழுதி : செய்யுளில் வேட்கை எனுஞ்சொன் முன்னர்க் F கைகெடும் அவாவரின் செய்கை மானக் 213