பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுதி வழுதி வழுதி கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 காமங் கதுவக் கையும் நானும் போமெனும் உண்மை புலப்படப் புகன்றனை அறிவுங் கெடுமோ அவாமுன் வரினே? செறிதொடி நல்லாய் நெறிதடு மாறேல் நட்பிற் பிழைசெய நானறி கில்லேன் கட்கத் தின்மேற் கழறினென் ஆணை; நாணம் இலியென நவின்றனை என்னை ஆவினம் ஒரா தறைவது முறையோ? நாணம் பேணல் நங்கையர்க் கியல்பு பேனுந் தமிழொடு பெண்மைமே லாணை; வாழிய தமிழொடு வாழ்கநின் நாணம் ஏழிசை மொழியாய் ஏணிச் சீற்றம்? காதற் குறிப்பைக் கன்னியர் தாமே ஒதல் பெண்மைக் குயரற மாமோ? வஞ்சியர் தம்மை வஞ்சித் தொழுகல் நெஞ்சிலா ஆடவர்க்கு நிலைத்ததோ ரியற்கை; பழகுநாள் தொட்டுப் பற்றும் அன்பும் ஒழுகுதல் போல ஊர்மொழிந் திருந்தனை: நின்செய லனைத்தும் நீடிய காதற் றன்மையை யுணர்த்தும் தகைமைய எனயான் நம்பி நின்றேன். நலிவுற மெலிவுற வெம்பி யழிய வெறுப்பினைக் காட்டுதி: என்னகம் நின்னகம் எனவே றில்லை என்னநீ மொழிந்ததை இமைப்பினில் மறந்து பெண்மை யறமோ பேசுதி பெரும, . மண்ணாள் வேந்தர் மரபினில் வந்தோர்க் குண்மையும் பொய்ம்மையும் ஒருபடித் தன்றோ பெண்மையை எண்மையாப் பேசினை, பெரும. அறியா துரைத்தனன் அரியநூற் பாவினுட் செறிபொருள் உணர்ந்து செப்புந் திறத்தாய்