இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இளம்பெரு வழுதி குழலி வழுதி தெரியா திதனைத் திரிபுற வுணர்ந்தனை உரிமை யுடையேன் உரைநகை மொழியைப் பிறழ வுணர்ந்து பிதற்றுதி சினமொழி: என்னகம் நின்னகம் இருவே றியற்கைய என்ன நினைந்தநீ இங்ங்ணம் மாறினை, நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே வஞ்சி யதனை வஞ்சம் என்றனை மன்னர் மரபில் வந்ததோர் குறையோ? பெண்மையைப் பழிக்கும் பெற்றிமை ஈங்கிலை கண்ணிற் புண்செயக் கருதுமோ என்னுளம்? (அவள் கண்ணில் நீர்ததும்பல் கண்டு) இணையன கூறியும் எனைநீ புலந்து புனல்வழி விழியொடு பொருமுதல் முறையோ? அன்புப் பெருக்கின் ஆழங் காணாத் திகைப்பிற் களிப்பிற் சிந்தும் நீரிது (இருவரும் நகைக்கின்றனர்) மதுரை மூதூர் மாந்தரொடு வையைப் புதுநீ ராடப் போதுவம் நாளை, நின்னிழல் வாழ நினைத்துளேன் ஆதலில் என்மொழி இயம்பினும் இசைகுவென் யானே. -அஆஆஆ.அ