பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[2T8] கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 குழவி : மெய்ப்பொருள் உணர்ந்த மேலோய் நின்போற் கைப்பொருள் இழக்கக் கருதிலேன் பேதை வழுதி : மெல்லியல் நவின்றதும் மெய்யுணர் வாகும் - சொல்லுமென் மொழியும் மெய்யுணர் வாகும் குழலி : என்னகம் நின்னகம் இருவே றிலையாற் சொன்னவை ஒன்றே சுட்டுதல் இயற்கை; இருவரும் நகைத்து மகிழ்கின்றனர்) வழுதி : உதுக்காண் அடைகரை நின்றோர் அடங்கா தோடிப் படுதிரை பிதிரத் துடுமெனப் பாய்ந்துளம் எஞ்சா மகிழ்ச்சியின் எக்களித் தெழுஉம் அஞ்சாக் காளையர் அணிகொளுங் காட்சி விழிக்கு விருந்தொடு வியப்பா மெனினும் குழிக்குட் படாஅது பிழைத்தவர் எழுக; குழலி ஆஆ. ஆங்கவன் ஆற்றினுட் பாய்ந்தோன் ஒஓவென் றலறி உயர்த்திய கையொடு போதல் உற்றனன் புனலொடும் ஐயஒ! ஆத லறியான் அளியன் அவனே! வழுதி : வரம்பின் இகந்தோர் வாழ்விற் பெறுபயன் திறம்பட வுணர்த்திச் சென்றனன் அவன்றான்; குழவி : காதலர் தம்முள் ஏதிலர் போலப் போதரு புனலும் புகுபுகு தோறும் ஆடியும் ஒடியும் ஆவென் றலறியும் கூடியுந் தணந்தும் கூக்குர லிட்டும் அயலார் ஆங்குக் காணா வகையில் வழுதி : மயல்விழி பேசி மயங்குதல் காணுதி அயலார் நம்மை அறியும் வகையில் மயல்விழி பேசி மயங்கினை நீதான்