இளம்பெருவழுதி குழலி : ஏதிலர் நாமோ? தீதில் மணத்துக் காதல் உறவினர்; கணவன் மனைவி, வழுதி : மங்கல இன்னிசை மணநாட் பந்தர் இங்கொன் றிலாமுன் இல்லறந் தொடங்குமோ? குழலி : வையைப் புதுப்புனல் மங்கல இன்னிசை, வெய்யில் காணா வியன்மரச் சோலை மணநாட் பந்தர் மற்றென் வேண்டும் வழுதி பறையொலி முழங்கப் பாயும் புதுப்புனல், நிறையழி மாதர் நெஞ்சம் போலவும் பாடல் அறியாப் பாவலன் போலவும் கூடுஞ் சிறையழித் தோடுதல் காணுதி: குழலி : புக்ககம் புகூஉம் புதுமணப் பெண்ணுளம் மிக்க காதலின் விரைந்த தப்புனல் வழுதி ; காதற் புனலும் கரைகடந் தேகின் ஏதம் நிகழும்; எல்லையுட் படுமேல் யாதுங் குறைவிலை எழுபயன் விளையும்: குழலி : காமர் கடும்புனல் கலந்துட னாடப் போமலர் தம்மைப் பொறுப்பொடு தடுத்த முதியோர்த் தப்பி முன்னு ரை நண்ணிய சிறியோர்த் தேடும் பெரியோர்க் காணுதி: வழுதி நானந் தடுப்ப நடுநிலை நிலாது பேணுங் காதல் பிடர்பிடித் துந்தத் தலைமகன் பின்செலும் தணியா மனத்தை அலைந்து தேடும் தலைமகள் மானும்: குழலி - : நான்கத வாக நன்கனம் காத்தும் ஆண்மகன் கள்வன் அவள்மனங் கவர்ந்து செலுமேல் தெரிவை தேடா தென்செயும்? வழுதி : கவர்ந்த தெவர்மனம் கவர்ந்தவர் எவரென உவந்தெழு காதலில் உளம்மயங் கினைகொல்? 219
பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/50
Appearance