பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 குழலி வழுதி குழலி வழுதி வழுதி வழுதி கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 கூறும் பல்பொருள் கோற்றொடி மாதர் தேறும் பொழுதிற் சிறுமகார் நழுவக் காணா தலமந்து கண்ணிர் பொழிந்து நாணா தலறும் நங்கையர் காணுதி: | அயர்வில் மூழ்கியோர் அரும்பொருளிழந்து துயரில் வீழ்ந்து துடிப்ப தியல்பே குளிர்புனற் கரையிற் குழுமியோர் மொழிமொழி ஒன்றா துடனெழுந் தொலிக்கும் அவைதாம் கொன்றா வேள்விக் கொழுந்தழல் வளர்த்து மறையவர் ஒதும் மந்திரம் போலத் தெரியா வகையிற் றிகைப்புறச் செய்தன: நாடிய கல்வி நன்கணம் கற்றோர் கல்லா மாக்கள் கணவர் மனைவியர் எல்லா மாந்தரும் ஈண்டின் புறல்காண் இன்பம் காதல் எனுமிவ் வுணர்வு கற்றவர். மற்றவர், காளையர், கன்னியர், உற்றவ ரெவர்க்கும் உரிய பொதுமை: மாந்தளிர் பிறதளிர் போந்தவை மிதந்து தேங்கமழ் மலராற் தீம்புனல் மறைப்ப நானுறு மடந்தை நன்மா மேனி பேணி மறைந்துறுஉம் பெற்றிமை மான வையைக் குலக்கொடி வழிவழி நடந்து செய்யவர் மகிழ்ந்து சீர்பெற வந்தனர்; ஐயை அவள்வரூஉம் அழகினைக் காணுதி உடலை மறைத்தவள் உளத்தை மறைத்திலள் நடவுசெய் வோர்க்கு நலம்பல தந்து விளைத்தன ளின்பம் உழைத்தவர் தமக்கே. முல்லைச் சிரிப்பில் முகைப்பரு வத்தர் நல்லியல் மலரவிழ் பருவ நங்கையர்