பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணன் சீயன் வாணன் சீயன் காட்சி 8 காழக வேந்தன் கடிமனை யமர்ந்தவன் ஏழிசை எழிலியை எழில்மலைக் கோனுக்குத் தரநினைந்தமைக்கொடுந் தனித்துரையாடி ஒருதலையாகி உய்த்தனன் துதே. O. O. O. O. O. இலங்கிலை நெடுவேல் ஏந்தும் வேந்தே கலங்குள்க் குறிப்பைக் காட்டும் நும்முகம் கலக்கம் உறற்குக் காரணம் யாதென விளக்கின் அதற்கொரு விடிவு தோன்றும், முந்தையர் அயர்ந்த முன்னொரு நாளிற் செந்தமிழ் வேந்தன் நந்தம் நாட்டை அடிமை செய்தனன் அன்று முதலா அடிபணிந் தேத்தி ஆண்டு வருதும், புலிவில் கயலெனப் புகலும் கொடியுள் வலிய தெதுவோ அதுநமை வணக்கும். தலைமுறை பலவாத் தனிநம் ஆட்சி இலையே! இதுநம் தலைவிதி போலும்! தலைவிதி யோஇது? தகுவலி யின்மையால் வலைவிழு மானென வதங்கி நின்றனம். இலையின் அடிமை எனநாம் எழுதல் தொலைவில் இலையால் துணைவரும் அமைச்சே அல்லார் ஆகும் அவலம் அகல நெல்லூர் வாண நினைத்தொரு வழிபுகல்,