பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி வாணன் திரைசூழ் காழகந் திறைசெலுத் தாதென வரைக. ஒலை வருவது வருக; சீயன் வேம்பன் படைகொடு விரைகுவ னாகின் தாங்கும் நிலையினைத் தகுதுணை வேண்டும். வாணி படைவலி துணைவலி பற்றாக் குறையெனில் நடைமுறை மாற்றி நட்பைப் பெருக்குக சியன் : நட்பைப் பெருக்கி நயந்து திரிதல் வெட்கம் வெட்கம் விடுதலை ஏது? வாணன் : நயத்தல் எனிலது நடுங்குதேலன்று உயத்தகும் வழியால் உறவினன் ஆக்குக: உரிமை பெற்றுநம் நாடும் உய்யும் இருவீர் தாமும் சரிநிகராவீர்; சீயன் வெளிப்படை யாக விளம்புக வாண: வாணன் களிப்புடைச் செயலே கழறினென் வேந்தே சீயன் : சுற்றிச் சுற்றிச் செல்லுதல் விடுத்துத் தெற்றென உளத்தைத் திறந்து காட்டுக; வாணன் பொதியின் இன்று புதியன் நினக்கு மதிகொடு நினையின் மைத்துனன் நாளை சீயன் : புலம்பும் நிலையேன் புகுந்தது நினக்கு? வாணன் அலங்கல் மார்ப அமைதியிற் கேண்மோ மலர்த்தார் வேம்பன் மைந்தன் என்றும் நிலைத்த மருகன் நினக்கென ஆகின் வலந்தரு பாண்டியன் மைத்துனன் அன்றோ? சீயன் : நவிலும் நின்மொழி நகையே நல்கும்! வாணன் : புவியில் நிகரிலை எனப்புகழ் பெற்றவன் வாள்வலி கற்றவள் தோள்வலி யுற்றவள் ஆள்வினை பெற்றவள் அருங்கலை முற்றவும் பழுதற வுணர்ந்தவள் பாவை யவள்தான்