உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி எழிலி : நல்லர் மறவர் செல்போர் வெல்லும் வல்லர் வனப்பர் வாயிதழ் நகையர் இவண்வரு காலை இனியர்க் கண்டுளேன் (எழிலி சென்றபின் அமைச்சரை நோக்கி) சீயன் : பொருள்பொதி மொழிகள் புகன்றனள் எழிலி தருமொழிக் குறிப்பைத் தெளிந்தெனை கொல்லோ? வாணர் : அம்மகள் குறிப்பும் நும்முளக் குறிப்பும் செம்மையில் உணர்ந்தனன். ..... சீயன் - - - - - - - - - - - - செப்புக செப்புக வாணன் : வஞ்சி நாடனை வஞ்சி விழைந்தமை நெஞ்சக மொழியால் நிழல்போல் தெரிந்தது: மலைக்கோன் அவற்கு மகட்கொடை நல்கி நிலைக்கும் தொடர்பை வளர்க்க நினைந்துளிர்; சீயன் : முற்றும் உண்மை முயற்சிமேற் கொள்க சற்றுத் தாழ்த்தேல் சடுதியில் முயல்க: வாணன் : உன்னி விரைவில் ஆவன உஞற்றுவென்; கன்னித் திங்கள் காருவா நாளின் பின்னை வருநாட் பிறந்த வேம்பன் வெள்ளணித் திருநாள் விழவு மேம்பட உள்ளிநம் வருகைக் குய்த்துளன் அழைப்பு: பிறந்த நாளுடன் பெருமகார் நோன்பும் சிறந்து விளங்கச் சிந்தை கொண்டுளேன்: அவ்விடை வருமலைக் கோனுடன் அளாவிச் செவ்விதின் நம்முளஞ் செப்புதும் நன்கு சீயன் : மகாஅர் நோன்பா? மற்றஃ தென்ன? வாணன் : அஃதா தமிழர் அயருந் திருவிழா, கும்பியுங் கோலுங் கொட்டியும் ஆடியும் இம்மென் மொழியால் இன்னிசை பாடியும் மைவிழிச் சிறுமியர் மாண்புற பாவை 225