பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 கைபுனைந் தியற்றிக் களித்து மகிழ்நாள் எண்ணும் எழுத்தும் இளஞ்சிறார் பயிலப் பண்ணுந் திருநாள் பைந்தமிழ்ப் பெருநாள் வில்லும் வாளும் விளையாட் டுணர்வொடு சொல்லிப் பயிற்றத் தொல்குவார் தருநாள் மடங்கொல் கல்வியும் மறமும் பயிலத் தொடங்கும் நாளெனச் சொல்லுவர் அவர்தாம்; சீயன் : வெள்ளணி விழாவும் நல்லதோர் வாய்ப்பாம் உள்ளியது முடிக்க உற்றதோர் துணையாம்; வில்லோன் அவனை விழலிற் கண்டு சொல்லுமுன் திருமணத் தூது விடுத்து மலைநா டுடையன் மனத்தை யறிக; வாணன் : சிலையான் உளத்தைச் செவ்விதின் அறிய வாயில் வேண்டா வாணன் யானே போயுரை யாடிப் போதர நினைத்தனென் சேரன் பொதியற்குச் சேரான் ஆகிய நேரம் ஈது ... .... - சீயன் : . . . . . . . . நின்னுரை சரியே அன்னவன் உளமறிந் தாய்ந்துரை யாடி நன்மொழி கொணர்ந்து நவிலுக நீயே