பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 கவியரசர் முடியரசன் படைப்புகள்-8 அச்சுதன் மன்னர் திருவுளம் என்னென அறிகிலேன் மலைக்கோன்: முந்தையர் சிலர்தாம் மொய்ம்பில ராகித் ■ தந்தங் கடமையிற் றாழ்ந்தும் மறந்தும் நாடும் எல்லையும் நயவா ராகி ஆடல் நயந்தும் பாடல் ஒர்ந்தும் சோர்ந்துள பொழுது சூழ்ந்தன ராகிச் சேர்ந்தநம் எல்லையைச் சிறுமீன் பாண்டியர் தமதென் றாக்கித் தருக்கினர்; இன்றோ நமதென உரிமை நாடிப் புகுந்துளோம்: பொறாது கயலோன் புழுங்குவ னாகின் வெறாது செறாது விடுவதோ? . . . . அச்சுதன் ! ---------------- -------------. வேந்தே சீற்றமும் வெறுப்பும் ஆற்றல் குறைக்கும்: ஏற்றநல் லறிவும் ஏற்றங் கொளாது: பொறுமையிற் சூழ்ந்து புகுதல் வேண்டும்: மலைக்கோன்: பொறுமை பொறுமை இன்னுமோ பொறுமை? பொறையெனப் புழுவெனப் பொறையனோ வாழ்வது? மழவர் காலில் வளைந்து கிடப்பது கழலோ? அன்றிக் கைவினைச் சிலம்போ? கார்நிறத் துகிலிற் கட்டிய கச்சு மார்பிலோ? அன்றி மருங்கில் இடையிலோ? அஞ்சில் பீலி அணிந்த தலையிற் குஞ்சியோ? அன்றிக் கூந்தலோ? சொல்வீர்! அச்சுதன் : சேரர் மரபைச் செப்பலும் வேண்டுமோ? வீரர் உணர்த்தும் வேளை வரும்வரை பதுங்கி யிருத்தல் பயன்தரும் மேலும் வானநூல் வல்லர் வடநூல் முற்றுந் தேனென மாந்தித் தெளிந்த மதியர் தாக்குந் தரியலர் எனினுந் தணிந்து தூக்கிச் சொல்லுஞ் சொல்லினர் மனத்துட்