இளம்பெருவழுதி காக்கும் மறையைக் கரக்குங் கண்ணர் கற்றவர் மெச்சும் கணியன் நம்பியென் கற்ற பெயரினர் நாள்கோள் உரைப்பர் நலவழி மொழிவர் நாடாள் மன்னன் குலவழி வணங்குங் குலத்தினர் அவர்மொழி கடவான் காவலன் . . . . . . மலைக்கோள்: (குறுக்கிட்டு) i = i. i. i. கணியன் மொழியைக் கடவான் கொல்லோ காவலன்? . . . . அச்சுதன் : .......... .......... . . . . ஆமாம் அவரால் எல்லையை அடைதல் கூடும்: மலைக்கோள்: படையில் தலைவன் பண்புகள் எப்படி? அச்சுதன் நடையில் நல்லன் நாட்டின் அன்பன் = விழுப்புண் வேட்டு வெஞ்சமம் புக்கு வழுத்தும் புகழ்பெறுஉம் வாய்வாட் சமரன் ஏற்புடை வகையில் நாற்படை நடாத்தித் தார்ப்படை தாங்குந் தலைமகன் ஆவன் எழிலும் அறிவும் பழுநிய சுரும்பார் குழவி உடன்பிறப் பாகிப் புரக்கும் விழுமியன் அவன்றான் வெல்போர்க் கடம்பன்: மலைக்கோன்: அவற்கோர் உடன்பிற் பாட்டி யுண்டுகொல்? அவட்குக் கொழுநன் ஆகியோன் யாவன்? அச்சுதன் கொழுகொம் பறியாக் குலக்கொடி யம்மகள் அழகிற் பண்பில் அவட்கோர் இணையிலை; மலைக்கோன் சுரும்பார் குழலி தோகையின் பெயர்கொல்? விரும்பும் பெயர்தான் வெல்போர்க் கடம்பற்குப் பின்னவன் கொல்லோ? . . . . . . . . . அச்சுதன் : ..... .... ஆமாம் பின்னவள் சின்னவள் அரியணைச் சீர்பெறுந் தகுதியள் Z 229
பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/60
Appearance