பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 மன்னவன் கருதின் மங்கையின் மாலை மருவும்நும் தோளில் திருவுளம் யாதோ? மலைக்கோன் தன்மகள் எழிலியை என்மனை யாக்க மன்னன் சீயன் மனத்துட் கொண்டுளன்: நீயோ - கொள்ளற் கேற்றவள் குழலி யென்றனை உள்ளம் இருவர்க் குறைவிடம் ஆமோ? அச்சுதன் : பலரை மணத்தல் பார்புரந் தோம்பும் குலவழி யோர்க்குக் கொள்மர பாகும்; மலைக்கோன் செல்வச் செருக்கிற் செய்பிழை யாவும் நல்லவர் கோடல் நயத்தகு செயலோ? அச்சுதன் : குழலியை மணப்பிற் கூர்வேற் கடம்பன் பழகும் உறவாற் பணித்து நடப்பன் பாண்டி மன்னன் பகையும் ஒழியும்: ஆண்டுள சீயன் அரும்பெறன் மகளும் ஈண்டு வருமேல் இருபெரு நாடும் உறவாற் பிணையும் ஒருபகை ஈங்கிலை: உரிய எல்லையும் உளதாம் நமக்கே மலைக்கோன் இழந்தநம் எல்லையை உழந்து பெறவே விழைந்த தெம்முளம்; வேறு கருதேல். அச்சுதன் ; வேறு கருதிலேன் வேலை வருங்கால் மாறுகொண் டெழுந்து மண்ணை மீட்குதும், மலைக்கோன் முரணிய சீயன் பொருகயற் கொடியனைச் செருவிற் காணும் ஒருபெரும் நினைவொடு வேண்டினன் நம்துணை வேளை வாய்ந்தது: பாண்டியன் செருக்கும் பஞ்செனப் பறக்கும். கூண்டுக் கிளியெனக் கொட்டமும் அடங்கும்: அச்சுதன் : பகைகொடு போர்செயல் பலபல பாழ்படும் நனைமுக உறால் நலம்பல விளையும்: