பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுதி காட்சி 10 கரும்பார் குழலியும் தொல்குடி வழுதியும் கரும்பின் மொழியாற் கலந்துரையாடி மாலைப் பொழுதின் மணங்கமழ் மலர்நிறை சோலைக் காட்சியைச் சூழ்ந்துநோக் கினரே. O O. O. O. O. (சோலையில் தனிமையில் அமர்ந்து தனக்குள்) அரண்மனை துறந்தனன் அருமனை துறந்தனன் அரசு துறந்தனன் அரசில் அமர்ந்தனன் மழலை பேசும் மதலை துறந்தனன் பழகும் உறவினர் பற்றுந் துறந்தனன் அடிபணிந் தேத்த அரியனை யமரும் குடைநிழல் மறந்தனன் குடிநலம் நினைந்தனன் மணிமுடி கடிந்தனன் மயிர்முடி முடிந்தனன் தன்னலம் விட்டனன் பொதுநலம் வேட்டனன் . என்னே என்னே! அவன்றன் ஈகம்! மன்னன் வாழ்வினும் மக்கள் வாழ்வை உன்னியோன் உயர்வழி உலகுக் குய்த்தனன்; (சோலையுட் புக்கு அங்குத் தனித்திருக்கும் வழுதியைக் கண்டு தனிமை நாடினை தண்ணளி யுடையோய் இனிமைப் பொழுதில் ஏன்முக வாட்டம்? எண்ணக் கடலுள் ஆழ்ந்த தென்கொல்?