பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெரு வழுதி வழுதி குழலி வழுதி நண்ணுந் தனிம்ை நனிபடர் தருமே மலர்க்கா புகுவோர் மனத்துயர் தணிவார் நலத்துடனமைதி நண்ணுவர் நீயோ கலக்கம் குழப்பம் கையறு மயக்கம் புலப்பட இருத்தி, புக்க தென்கொல்? கனிமொழி நீயேன் கலங்கினை? எனக்குத் தனிமை இனிமை தருபடர் காண்கிலேன் மயங்கிக் குழம்பி மனமுங் கலங்கி இயங்கும் நிலையும் யானறி கில்லேன் ஆழ்ந்த சிந்தையான் அந்நிலை பெற்றேன்: வாழ்ந்த மன்னன் வையகத் துயரம் களைவான் வேண்டிக் காதல் மனையும் வளைமதில் மனையும் தளையென ஒரீஇ அரசடி யமர்ந்தோன் ஆய்ந்து கண்டு பரசுங் கொள்கை பாருக் கீந்தனன் பற்றால் வருவது முற்றிய துன்பம் அற்றால் வருவதோ ஆரா இன்பமென் றுலகம் உய்யக் கலகம் அகல நலவழி கண்ட நன்மா மகனைப் புலனுயர் புத்தனைப் பொதுநலப் பித்தனை உள்ளினென் அதன்றலை உலக மாந்தர் உள்ளமும் நினைந்தனென்; உலவா இன்பப் புதுமை உலகுட் புகுந்தனென் அன்றி மதிமயக் குறலோ மற்றோ ஒன்றிலை உலவா இன்ப வுலகுட் புகுந்து தலைவா தகுபொருள் யாது கண்டனை? உலக மென்ப தலகிலாப் பெருங்கடல்: அலைகடல் மிதக்கும் கலமே வாழ்க்கை; முயற்சி துடுப்பா முந்நீர் ஊர்வோன் அயர்ச்சியோ டளவிலா அவாக்கொளின் அவைதாம் பெருவலி யாகிப் பேதுறச் செய்யும்: 233