பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234. வழுதி கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 கரைசெல விடாது கலத்தைக் கவிழ்க்கும். அவாஅ வறுக்கும் ஆற்ற லுற்றோர் தவாஅத் துயரம் தவிர்ப்போர் ஆவர் இன்ப வுலகில் இஃதே கண்டேன் உரவோய் இளையை உலகின் நீங்கிய துறவோர் போல.... ..... (இடை மறித்து) ■ ■ 轟 ■ ■ ■ ■ ■ ■ 量 ■ 量 தோகைநின் சாயல், குவளை நிகர்வழி, கூரிய நன்மதி தவலில் மூரல், தண்டமிழ்ப் புலமை, நவையது பேரெழில், நல்லியற் பண்பு துறவைத் தடுத்துத் துணையொடு வாழும் உறவை வளர்க்கும் உயர்பெருங் கருவிகள்: என்முன் நின்னுரு வெழில்நலங் காட்டி மின்னுங் காலை மேவுமோ துறவு? அறிவுத் தெளிவின் ஆன்றோய் போலவும் செறியும் ஆண்மைத் திண்ணியோய் போலவும் அரும்பெறற் சால்பின் அமைந்தோய் போலவும் நிறைதரும் அமைதியில் உறைவோய் போலவும் முகத்தெழில் காட்டும் . . . . . . . . (குறுக்கிட்டு) ■ 華 睡 垂 睡 睡 ■ ■ ■ ■ ■ 重 முகமன் வேண்டா அகத்தில் மாசகல் அழகே அழகு; முகத்தின் பொலிவே மொய்ம்பநின் தூய அகத்தின் பொலிவை ஆடிபோற் காட்டும்: எற்புகழ்ந் தேத்தல் எப்பொருட் டோஉயிர்ப் பொற்சிலை யனையாய் புகழ்ச்சி வேண்டா: மன்னவர் நாளும் மகாஅர் நோன்பும் பின்வரு திங்களிற் பெருவிழா வாதலிற் பாவரங் கமைத்தது பைந்தமிழ்க் கழகம்: