Φstud Lφουφ5 வழுதி வழுதி ஆவல்மீக் கூர அடியனும் அகவற் பாவொன் றாங்கண் பரிவுடன் உய்த்தனென்: பாவாய் நீயும் பனுவல் யாத்துக் கழகப் பாவலர் குழுவிற் சேர்த்தி உழுவ லன்ப உய்த்துவென் யானும் காவலன் மைந்தனின் கற்பனைப் பாடல் தேர்வுறும் உறுதி.... = H = H = H .... தேர்வு செய்குநர் யார்புனை பாடல் எனவறி யாவணம் ஒர்புனை பெயராற் பேர்புனைந் ததன்கீழ் எழுதி யுய்த்துளென் ஏடறி குழுவிற்கு பழுது நிகழ வழியொன் றிலையால், பேரை யென்மொழி பிறழ வுணர்ந்தனை: புலமைப் பெருக்கால் பொருள்செறி சிறப்பால் தலைமை பெறும்நின் தண்டமிழ்ப் பாடலென் றியம்பிய தன்றி விளம்பிய தொன்றில், நயம்பட மொழியும் நல்லாய் நின்பா புலமும் அணியுடன் பொருளும் பிறவும் இலம்பா டுடைத்தோ? இனிமைத் தன்றோ? நம்மிற் சிறந்ததா நற்றமிழ்ப் பாவலர் தம்புலப் பெருக்காற் றருமுயர் பாட்டும் செம்புலக் கழகஞ் சேர்தல் கடுமால் தகுதி மிகுதி தலைமை கூறல் நகைதரு செயலே நாமது தவிர்கம், நிழலும் மணமும் நிறைதரு சோலை எழில்நலங் காண்குதும் எழுந்துடன் வருக குழலி அவனைத் தொடர்கிறாள்) பாடல் வல்லான் பாட்டிசைக் கேற்ப ஆடரங்கேறும் அணங்கின் இடையென வளிநடன் ஆட்ட வளரிளம் பூங்கொடி நெளியும் ஒசியும் நிமிரும் நுடங்கும். + 235
பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/66
Appearance