பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி வழுதி : உட்குவரத் தோன்றும் ஒருபெரு வேந்தன் கட்கம் ஏந்துங் கடுங்கண் மறவர் படையோடு புகூஉம் பருவம் நோக்கி, நடையெழில் மாதர் நடவாப் பிணியர் கருவுறு மாதர் கன்றின் ஆவினம் பிறருங் காப்பரண் பேணிப் புகல்போற் புறவும் பூவையும் பிறபிற புள்ளும் சிறகர் ஒடுக்கிச் சிற்றில் புகல்காண்; குழலி ஆடித் திரிந்த அங்கட் சிறாரைப் பாடித் துயிற்றப் பரிந்தெழு தாயர் பண்கொடு பாடப் பைந்துகிற் றொட்டிலுட் கண்படை கொளாஅது கையுங் காலும் நீட்டியும் ஆட்டியும் நெளியு மாபோற் காட்டிற் றிரிந்துன வீட்டிய புள்ளினம் கூட்டுட் புகுந்து குறுகுறுத் திருந்தன: வழுதி : காலை மன்னன் கவர்ந்தனன் ஏக மாலை மன்னன் மறித்து மீட்டென ஈண்டிய ஆனிரை இல்லம் வேட்டு மீண்டன மறுகிடை மேற்றிசை நோக்குதி: குழலி : மருத முன்றுறை வருபுன லாடிப் பெறுமக வுள்ளி விரையுந் தாயென நின்னுந் திரிந்தும் நெடிய மேய்ந்துபின் கன்று நினைந்து கறவைகள் மீண்டன: வழுதி : காமர் மலர்க்கா கண்டு களித்தனம் யாமும் மீள்வோம் எம்முடைய மனைக்கு குழலி : நில்லாக் கழுத்தொடு நிமிருங் குழலி, தொட்டிற் கிடந்து துள்ளும் இளஞ்சிறார். மருத முன்னுறை வருபுன் லாடிப் பெறுமக வுள்ளி பெயருந் தாய், என முன்னர் உரைத்த மொழிக்குறிப் பெல்லாம் நின்செவிப் புகாது நீங்கின கொல்லோ?