பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 செம்புலச் : நடையறா தொழுகும் நாளவைப் பெரியீர் நடையுடை வேந்தர் பலராய் வந்துளிர் தெருவிடைப் புதுமணல் தெள்ளிதிற் பரப்பி நிழல்தரு பந்தர் நீளிடை யியற்றி எழில்பெறு தோரணம் எங்கணும் நாற்றிச் சுவரெலாம் வான்சுதை கண்ணந் தீற்றிக் கவரும் வகையாற் கைத்திறங் காட்டப் பழம்பெரும் மூதூர் அழகுறு வனப்பால் புத்து ராகிப் பொலிவது கண்டீர்; முத்தமிழ் நிகழ்ச்சி எத்திசை நோக்கினும் பத்தி பத்தியாப் பார்த்து மகிழ்ந்தீர்; கோட்டச் சிறையகங் குறுகியோரின்மையிற் பூட்டாக் கதவொடு பொலிவதும் நோக்கினிர்; துறைதொறும் வல்லார்த் துருவி யவர்தம் நிறைவுறு திறமை நிறுத்து நோக்கி குறைவறப் போற்றுதுங் கூர்ந்தது காண்மின்: பாவலர் திறமை பாருல கறியும் ஆவலின் அரங்கொன் றமைத்தனம் ஆங்குப் பாடல் தாங்கிய பலப்பல ஏடுகள் நாடி வந்தன நடுவர் ஆய்ந்து முதன்மை காண முயன்றனர் அவற்றுள் எதனைத் தேர்வ தெனத்தடு மாறிச் சிறந்தன. இரண்டு தேர்ந்தனர் ஏடுகள் திறந்தவை காண்குநர் திறமை யுணர்வர்; ஆடவர் மகளிர் ஆயிரு பாலர் பாடற் குரியர் பரிசிற் குரியர் அவர்தாம் மாலிருங் குன்றன் மலர்சூழ் சுரும்பு கோலுங் குழலி கூறும் பெயரினர்: (அவையோர் கையொலியெழுப்புதல்) இருவீர் தாமும் ஈங்கிவண் வருக