பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி மாதேவி பாண்டியன் மாதேவி நா б6іттії வழுதி நாக னார் வழுதி பெறுவீர் வேந்தன் பீடுறு பரிசில் மாலிருங் குன்றன் வருக வருக (ஒருவரும் வாராமையால் மீண்டும்) மாலிருங் குன்றன் யாண்டுளன் வருக! (வழுதி வருகிறான். அனைவரும் வியப்பில் ஆழ்கின்றனர். பாண்டியன், தேவியை நோக்க) என்முகம் நோக்குதல் ஏனோ? பெரும, நின்கடைக் கண்ணால் என்முகம் நோக்கினை ஆதலின் யானுன் அருள்முகம் நோக்கினென்; ஐய போதும் அவையோர் நம்முகம் பைய நோக்கினர் பார்மின் அவையை: (வழுதியை நோக்கி) மாவிருங் குன்றன் வருக என்றனம் வாலறி வுடையாய் வழுதிஏன் வந்தனை? யார்புனை பாடல் எனவறி யாவணம் பேர்புனைந் தொருபா பேரவைக் குய்த்தனென் பழுதுரை நிகழா வழியிஃ தெனநினைந் தெழுதத் துணிந்தனென் . . பாதுகா_ாது எனின்அப் பாடல் அவையோர் முன்னர் அறைகுவை கொல்லோ? நவையறு பெரியீர் நவிலுவன் கேண்மின்: “உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர்: துஞ்சலு மிலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும்கொள்ளலர் அயர்விலர்: அன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்றாட் 243