பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.” (அவையோர் ஆர்ப்பொலியெழுப்ப) நாகனார் : கருவிற் றிருவினை கழறிய பாடல் பொருண்மொழிக் காஞ்சி புகல்வ துணர்ந்தனம்; பாவலர் பெரும பரிசில் பெறுக காவலன் நல்குவன் கடிதிற் பெறுக (பரிசில் பெற வழுதிவர) பாண்டியன் : (மெலிய குரலில் தேவியை நோக்கி) காலவன் மைந்தன் பாவலன் ஆகினன்; பாவலற் பயந்த தாய்நீ யாகினை: வழுதி : (பாண்டியன் நல்கிய முத்துமாலையைப் பெற்று) தண்டலை சூழ்ந்து தண்ணிழ லளிக்கும் வெண்டலை யுறையும் விறன்மிகு புலவீர் என்சிறு பாடல் ஏற்றம் பெறுதல் நூம்மருட் கொடையே நுண்பல நாவால் புன்மனச் செய்யிற் புலர்பொழு துழுது நன்செய் நிலமென நற்பய்ன் விளைத்தீர் ஒருபெரும் பரிசில்நும் திருவடி வைத்துப் பெருமிதங் கொள்ளுவேன் பெரியீர் நும்மடி தொழுமெனை வாழ்த்துக தொண்டனை வாழ்த்துக: நாகனார் : எழுக எழுக என்னுயிர் மைந்த வாழ்நாள் நினக்கு வளர்க என்விழி சூழ்புனல் மல்கித் துவித்தது. புலனம் அளக்கற் பாற்றோ? அளித்தஇப் பாடல் அளக்கர் சூழுல கறிந்தறி தேத்த நிலைத்துத் திகழும் நின்பெயர் வாழும்: நிலையா வுலகத்து நிலைத்தது நின்பா (அவையை நோக்கி) அவையிர் யானொன் றறைகுவென் கேண்மின் இவனோர் இளைஞர் எனினும் சான்றோர்