பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவலன் பாண்டியன் ஒற்றன் ஏவலன் 1 காட்சி 12 எல்லை கடந்தனன் மலைக்கோன் என்னுஞ் சொல்லது நெஞ்சிற் சுடுதலின் வெகுண்டு நாளவை யிருந்த வாள்வலி மீனவன் கேளெனுங் குழுவோடு குழுரையாடிப் படை தொடக் கடம்பனைப் பணித்தனன் அவனே. (நாளவை யமர்ந்த பாண்டியனை வணங்கி) தென்னா டுடையா திருமா வலியோய் பன்னு றாண்டு பார்புரந் தோம்பி மன்னி வாழ்க மழைவளஞ் சுரக்கும் நாஞ்சில் ஒற்றன் நம்மலை வந்துளன்: தீஞ்சொல் தருவன் தென்பா லொற்றன் உள்வர விடுக... - - ஒருகுடை நிழலமர் ஒள்வேல் மன்ன ஓங்குக கொற்றம் தென்றிசை மருங்கின் நின்னுள நிலைப்படைக் கொன்றிய தலைவன் ஒலை தந்துளன்: (ஒலையை வாங்கிப் படித்துக் கொண்டே பாண்டியன் கனன்று நகைசெய்ய) காவலன் நகைத்தனன் கார்பொரும் இடியெனப் பாவும் அவ்வொலி பன்மணி மண்டபம் யாவும் எதிரொலி யெழுப்புதல் கேள்நீ நிகழ்வ தியாதோ? நெஞ்சதிர் கின்றது: