பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி

ஏவலன் 2 ஏவலன் ஏவலன் 2 ஏவலன் 1 ஏவலன் 2 ஏவலன் 1 ஏவலன் 2 ஏவலன் 1 பாண்டியன் நகைதவழ் முகத்திற் பகைகொளுஞ் சீற்றம்: அடர்தரு புருவம் அகல்நுதல் ஏறின நிமிர்ந்தெழு மீசை தொடர்ந்து துடித்தன அருள்விழி யிரண்டும் அழன்றன பார்நீ விரிநுதற் புருவம் வியர்த்தது காண்நீ வியனகல் மார்பம் விம்மிப் புடைப்பக் கயலுயர் வெல்கொடிக் காவலன் தோள்கள் வீங்க ஆங்கண் விடுநெட் டுயிர்ப்பொலி இங்குநம் செவியுள் இடிப்பது கேள்நீ பொறுமைக் குரியர் புலவர் முகமும் கருமை மருவிக் கலக்கம் உறல்காண்; உறுசினந்தோன்ற ஒற்றன் ஒலை தருபொருள் யாதோ? வருவது போரோ? செம்புலச் சிறையார் சிந்தையும் முகமும் வெம்பித் தவித்தனர் விளக்கங் காணாது. இடைவாட் கையன் படைஞர் தலைவன் குடையோன் முகத்தைக் கூர்ந்து நோக்கினன் கணியன் நம்பி கடுகள வுணர்வும் அணிகொள் முகத்தில் அரும்பா திருந்தனர்; முற்றும் உணர்ந்த நற்றவத் தவரைப் பற்றுமோ உணர்வு? . . ■■■-■■ ■■■ . பார்பார் அங்கே இளம்பெரு வழுதியின் உளங்கொள் உணர்வு விளம்பும் முகமும் விழியுஞ் சிவந்தன: அமைச்சர் பெரும அருந்திறற் கடம்ப நமைச்சிறு துசெனப் பகைத்தனம் மலைக்கோன்; நாஞ்சிற் றலைவன் நம்முழை உய்ந்தது தீஞ்சொல் லன்று தீச்சொல் லாகும். தென்றிசை யெல்லை மண்தினும் ஆவல் 249