பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 துன்றிய மனத்தோடு தொடுத்துளன் நெடும்போர்: எல்லைப் படையை இரியச் செய்தவன் அல்லிற் புகுதந் தமைத்துளன் பாசறை நெஞ்சுட் கரவு நிறைந்தவ னாகி வஞ்சியான் வெள்ளணி காண வந்தனன்; ஒழுகுதே னுதட்டில் உரைபல வடித்துப் பழகினன் நம்பினம்; பகைபுகை மனத்தன் வஞ்சனை செய்தனன்; வஞ்சியான் எனுஞ்சொல் வஞ்சனை யுடையாற்கு வாய்புடைத் தாமோ? மாற்றார் காலடி மண்படாப் பொதியிற் காற்றோ நுகரக் கருதினன்? கயவ! கூற்றொடு பொருதக் குறித்தனன் போலும் ஏற்ற நட்பின் இழுக்கில னாகிற் போற்றுவம் தென்றற் புதுமணம் பெறலாம்: இகலொடு வருமேல் இருப்புள உயிர்ப்பும் பகல்முன் பனியெனப் பரந்துகெட் டொழிவன்; முழுமுதல் தடிய விழுமரம் போல அழியும் அவன்றான் அரசொடுஞ் சாய்ந்து நாகனார் தகைசால் வேந்தே தணியா தோங்கும் வெகுளி தவிர்க வேண்டுவ செய்க பாண்டியன் : இகன்மை யறியா இன்றமிழ்ப் புலவீர் வெகுளி தவிரும் வேளையோ ஈது? தரியலர் தாமே உரியநம் எல்லையுட் செறிவது கண்டுஞ் சினவா தென்செய? இனப்போர் எனினோ சினப்பீர் இவன்நம் இனத்தான் எனவும் இயம்புவீர் ஐய’ மனத்தான் நினைமின் வஞ்சகர் நம்மண் தினத்தான் விடவோ? திருடர் புகவோ வாளுந் தோளும் வட்டவெண் குடையும் கோலும் பெற்றுளேன்?... . ■■