பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o இளம்பெருவழுதி கணியன் கடம்பன் வழுதி கடம்பன் நாகனார்

னியன் yroങ്ങrf பேணிய நட்பிற் பிறழ்ந்து வஞ்சங் காணிய விழையுங் கயவ னாகுக! மலைவளங் கெழுமிய மலைக்கோன் அவனோடு மலைதற்கேற்ற வலியன் வழுதி: காளை நிகழ்த்துங் கன்னிப் போர்க்கு வேளை யிதுவே விரைந்திது செய்க இளையார் சமர்செய எனினுங் களஞ்செலா இளையர் ஆகலின் இளம்பெரு வழுதி போர்வேட் டெழுதல் பொருந்துவ தன்று: தார்தாங் கமரில் தானை நடாத்திப் பாண்டி நாட்டின் பழம்பெரும் மானம் ஈண்டுக் காத்தல் என்பெருங் கடனாம்: வழுதியின் வலியிற் கடம்பர் கையம் எழுவ தென்கொல்? என்வலி நம்பிலர்: ஐய நின்னுழை ஐயங் கொண்டிலேன் செய்யெனச் செய்யும் செயலேன் தாய்நா டோம்பும் பணியேன் ஒருவர்ப் பணியேன் வீம்பும் அறியேன் விரகும் அறியேன் நாளை மன்னர் நலிவுறா தோம்பும் தோளும் எனதே ஆதலிற் சொன்னேன் தடந்தோட் கடம்பன் தவறாக் கணியர் தொடர்ந்துள மொழிகள் துயன வெனினும் கடமை பிழையாக் கடம்பன் உரைத்தாங் கடுபோர் நடாத்த அவனே செல்க என்னுடன் முரணி இயம்புத லொன்றே தென்மொழிப் புலவர் தந்தொழி லாகும்: ஆய்ந்து நல்லன அறைகுவ தெந்தொழில் காய்ந்த மொழியெனக் கழறுவ திவர்தொழில்: