பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவலன் 1 காவலன் 2 காட்சி 14 நள்ளென் யாமத்தும் நண்ணி பாசறை மன்னர்க் கண்டு மனம்நெகிழ் கனிமொழி பலபடக் கூறிப் பரிசிலும் நல்கி மலையன் வீறுரை வழங்கினன் வெகுண்டு தலைவன் விறல்வேள் தன்னொடுஞ் சூழ்ந்தே. (மலைக்கோன் பாசறைதொறும் புகுந்துவரல் கண்டு) கண்படை கொள்ளாக் காவல ஆங்கண் வெண்படாம் விசித்த வியனகல் பாசறை. மதநீர் பொழிந்து மதர்த்துத் தறிப்படாக் கதமிகு களிறு பிளிறும் பாசறை, விழுப்புண் ஏற்றோர் செய்துயிர்த் திருக்கும் புகுக்கல் நாறும் புலவுப் பாசறை, விளக்கந் தாங்கி வீரன் முன்செலத் துளக்கம் அறியார் துணிவினர் தொடரப் படையின் முன்னோன் பணிவொடு செல்லத் தொடையற் பணையணி தோளுயர் வேந்தன் புகுந்து புகுந்து போதல் காண்நீ புகுந்தோன் ஆங்கட் புண்படு மறவர் தோளில் அமைந்த தொடிப்பூண் கையன் வாள்வாய் முனைஞர் வகைவகை யறிந்து முகனமர்ந்த தினிய மொழிந்து பலபொருள் அகனமர்ந் துருகி அருவி அவரைத் தேற்றும் பாங்கும் திண்டோள் மென்றுகில்