பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 காற்றின் நெகிழக் கையிற் றழுவி நள்ளிராப் பொழுதினும் பள்ளி கொள்ளான் மள்ளர் சிலரொடும் திரிதரும் மாட்சியும் உள்ளியோர் சமரில் ஊறெது நேரினும் உள்ளாரதனை உயிரும் ஈகுவர்; காவலன் 1 : நமது பாசறை நண்ணினன் பேசா தமைக் - - - (அரசன் அருகில் வர) இருவரும் ! ---- அரசே அடியோம் வணக்கம் (மன்னன் புன்னகை செய்துவிட்டு மற்றொரு பாசறையுட் புக) விறல்வேள் : கைவேல் களிற்றொடு போக்கக் களிறு மெய்ம்மேற் சாய்தலின் மீளி யிவன்றன் கால்கள் நைந்தன: காளை யிவனோ வேல்பட மார்பில் விழுப்புண் பட்டனன்; பகழி நுனியாற் பழுதுற்றொருவிழி மிகுபுண் ணிரொடு மேவினன் இவனே. கொய்யுளைப் புரவிக் குளம்புகள் படலாற் பெய்யுங் குருதிப் பெரும்புண் பட்டு மெய்யெலாஞ் சிதைந்து வீழ்ந்தனன் இவன்றான்; குழுவோடு வந்த கொடும்படைப் புகுந்தோன் அழுவத் துற்ற அடையலர்த் தொலைத்து வாள்வாய் படலாற் றோள்க ளிழந்து மீள்வோன் மயங்கி வீழ்ந்தனன் இவனே. தலையுந் தோளும் தாரணி மார்பும் பலபல காயம் பட்டோ ரிலரே. மலைக்கோன் : (படைத்தலைவனை நோக்கி) வெற்றித் திருமகள் விழைந்தோ ராதாலின் உற்ற விலைதந் துரிமை பெற்றனர்; அத்தகு மறவர் அகமகிழ் வுறுமா