பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி விறல்வேள் மலைக்கோ றெத்தனைப் பொன்னும் இல்லிற் குய்க்க (சிதைந்த படைக்கலங்களை நோக்கி) கருவிகள் பலவும் உருவழிந் தனகொல்? உருவழி கருவிகள் பெருகின மன்னா உரைகழி நெடுவாள் உடன்றவர்ப் பொருங்கால் மருமம் பாய்ந்து குருதி தோய்ந்து கதுவாய் போகிக் கைப்பிடி யிழந்தன; தகவேல் அவ்வுழிக் கடந்தரன் முற்றிக் கதவம் உடைத்துக் கடும்போர் நிகழ்த்த நுதிகள் மழுங்கிச் சுரைகள் கழன்று காம்பும் ஆணியுங் கலங்கிக் கெட்டன: விடுகணை இடைவெளி விடாது தொடலாற் கொடுவிற் பூட்டிக் குழையா திறுக்கிய நெடுநாள் தேய்புரி யாகி நின்றன: கருவிகள் புதியன விரைவின் இவண்வரும்: பொருசமர் புரிவீர் ஒருசொற் கேண்மின் கடலான் இன்று கடலனாகிப் பேடென நம்மைப் பிறழ வுணர்ந்து பூமி நாடு பூழியாகுமென் றுழுறு பூவென உதிர்த்துளன் சிலசொல் மிதியற் செருப்பை மேவலன் அவன்றான் மிதிக்குஞ் செருப்பென மதித்தனன் முன்னோர் போற்றிக் காத்த புகழ்பெறும் அயிரை ஆற்றுக் குறுமணல் அயிரையென் றெண்ணிப் போற்றல னாகிப் போர்மேற் கொண்டுளன்: ஆயிரை பற்ற ஆற்றுட் செல்லான் அயிரை மலையை அணுகினன் மீனவன்; உரிமை அடிமை இரண்டுள் ஒன்று தெரிதல் அவ்வழிச் செயற்படல் நுங்கடன்: சுவர்வாழ் பல்லி உவ்ரிவாழ் முதலையைக் கவர நினைப்பிற் கனவினுங் கூடுமோ? 261