பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 விறல்வேற் (படைஞரை நோக்கி) உடையா நெடுவே லுடையீர்! எதிர்க்கும் படையா ரறியாது பதுங்கித் தாக்கும் நடையும் சிலகால் நயத்தல் வேண்டும்: எப்படை யெத்திசை என்றறி யாவணம் அப்படை மயங்க ஆங்காங் கமைக; பிறரறி யாவணம் விரைவொடு சென்று நிலைப்படை மறைந்துள நெடுவிலை யரணை வளைத்து நின்று தொலைத்தல் வேண்டும்: குன்றின் பாங்கர்க் கொடும்படை யொன்று நின்றுள தென்றும் நெடுமரஞ் செறிந்த காட்டில் ஒருபடை கரந்துள தென்றும் வேட்டம் போகும் மிளைசூழ் காட்டின் கோட்டில் வேற்படை குவிந்துள தென்றும் எல்லைக் கோட்டில் இருபெரும் படைகள் வில்வாள் மறப்படை விரைந்துள தென்றும் செவியிற் புக்கன சிந்தையிற் கொள்க: அவையவை நன்கறிந் தாங்காங் குறைவோர் புறத்துறா வண்ணம் புடைபடை முற்றி மறத்துறை காட்டுக மாற்றார் களத்தே.