பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகனார் பாண்டியன் செம்புலச் காட்சி 15 தோல்வியிற் கவன்ற தொடித்தோட் பாண்டியன் மேலெழு செங்கதிர் விரிபொழு தத்துக் கடிமனை யிருக்கக் கன்னி குழலியைக் கடத்தினர் என்னுங் கடுமொழி கேட்டுக் காவலன் றன்மகன் காளை வழுதியை மேவலர் மேற்செலப் பணித்தனன் சினந்தே. நிலந்தொழ வந்த வலந்தரு பாண்டிய இலங்கொளி வீசி எழில்தவழ் நின்முகம் கலங்கிய மனத்தைக் காட்டுவ தென்கொல்? அஞ்சுத லறியா ஆண்மை யுணர்த்தும் செஞ்சுடர் விழிகள் சிறுத்தன எதனால்? புன்னகை மாறா நின்னிதழ் உலர என்னோ நிகழ்ந்தது? மன்னா உரைமதி: தென்றிசை மருங்கிற் சென்ற நம்படை வென்றி காணாது வெந்நிட் டோடக் குன்றும் மிளையும் நின்ற படையும் பொன்றின எஞ்சொற் புகுந்தநாள் முதலாக் கன்றி யென்றுங் கசிந்துநெக் குருகும்: என்றும் என்குலம் ஏலாப் பெரும்பழி ஒன்றித் தாழ்ந்து குன்றிய தென்னால், களம்பல கண்ட காவல கலங்கேல் உளங்கொள வேண்டுவல் யாதுரை ஒருமொழி: புதைகணை பாய்ந்து புண்படப் பெருமை