பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 சிதையா தூன்றும் மதகளி போலச் சிதைவு வருங்காற் சிறிதும் ஒல்கார் மதனழி யாது மானங் காப்போர்; பொருசமர்க் களத்துப் புகுவோர் தாமும் இருவ ரன்றோ? இருவரும் ஒன்றே பெறுதல் உண்டோ? ஒருவர் தோற்பதும் ஒருவர் வெல்வதும் உலகத் தியற்கை; எழுமதிற் பூனை எப்பாற் றாவும்? பழுதற வுரைப்போர் பாரில் இல்லை. தோல்விக் குழன்று துவளா மனத்தர் மேல்வரும் வெற்றி மிலைவோர் ஆவர்; பாண்டியன் : இகலியோர் நம்முன் அந்நாள் வரையும் புகலிடந் தேடிப் போதுவ ரன்றி வென்றா னெனுஞ்சொல் விளைந்த துண்டோ? கொன்றா பன்ன கொடுஞ்சொல் கேட்டேன் குனற்ா வன்மை குன்றிய தென்கொல்? பின்றாழ் கூந்தற் பேதைய ராகி நின்றார் கொல்லோ நெடுவேல் மறவர்? நாகலார் : இடர்வருங் காலை இன்னா தெனக்கொளிற் றொடருந் துயரந் துளிர்த்துப் படறும், வாளாற் பகையை வணக்குதல் போலத் தாளால் ஊழையுந் தடுத்தல் ஆகும்: சூழ்ந்தொரு முடிவு துணிந்து செய்க தாழ்ந்த தோல்விக்குத் தளரா மனத்தொடு துன்பம் அகற்றி இன்பந் தருவினை இன்னே ஆற்ற எழுக வேந்தே பாண்டியன் தோலாக் கடம்பன் தொடுத்த போரில் ஏலாப் பழியோ எய்துவ தெமக்கு? செம்புலச் : படையின் மறைகள் பகைவர்க் குய்ப்போர் இடையுள ரெனவறிந் தினிநட வாது