பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் குழலி பாண்டியன் குழலி மாதேவி காட்சி 18 மீண்டு வந்த மேலவன் குழலியைக் காண்டலும் உளமிகக் களித்தன ராகிப் பாண்டியன் அவனுடன் பட்டத் தரசியும் வேண்டிய கூறி விளம்பினர் வாழ்த்தே. வந்தாய் கொல்லோ? வாஎன் மகளே! என் தாய் நினக்கோர் இடரும் இலையோ? வெந்துய ரொன்றும் விளைந்திட வில்லை வந்தவர் தமக்கே வளவிய நல்லடி எந்துயர் களைந்தனை யாது நிகழ்ந்தது? வந்தோர் யாவர்? மலைநாட் டவரோ? எந்நாட் டவரோ ஏந்திழை யறியேன், என்னாட் டோலர் என்பது தெரியும், ஏனுனைக் கடத்தினர்? எங்குனை நடத்தினர்? தேன்மொழி யுடையாய் திருடரோ அவர்தாம்? (நாணி நிற்க) நாணம் எதற்கு? நடுக்கம் எதற்கு? பேணும் எம்முழைப் பேசுக துணிந்து: வம்பலர் ஆகினும் வழிப்பறி செய்யும் வன்பவர் பாலிலை வாள்வாய் கையர் மன்னர் அழைத்தனர் என்ன மொழிய நன்னுதல் யானும் நம்பித் தொடர்ந்தேன்.