பக்கம்:முதலுதவி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டுகள் சேவை செய்தவர்கள். செஞ்சிலுவைச் சங்கத்திலும் ஐந்தாண்டுகள் அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் தங்களது முதிர்ந்த அ னு பவ த் ைத என்னிடம் கூறினர்கள். ஒவ்வொரு ஆபத்தையும் கூறி அதற்குரிய முதல் உதவியையும் எடுத்துக் காட்டினர்கள். அவர்கள் சொல்லியதை அவ்வப்பொழுது குறித்து வைத்திருந்தேன். அதுவே இறுதியாக இப்புத்தக உருவில் வெளிவரலாயிற்று. ஆபத்து எவர்க்கும் எங்நேரத்திலும் எவ்வுருவிலும் வரும். தகுந்த மருத்துவர்கள் கிராமங்களில் இல்லே. இதைப் படிப்பதால் ஒவ்வொருவரும் ஆபத்தில் முதல் உதவி செய்யலாம். உயிரை முதல் உதவியால் காக்க வேண்டும். அவ்வுயிர் கிலேத்து நிற்க மருத்துவர் பின் வழி செய்வார். முதல் உதவி செய்பவர்களே ஒருவனது உயிர் காக்க முதற்படியாக விளங்குகின்றனர். ஆகவே இந்நூலே நன்கு கவனித் துப் படி க்க வே ண் டும் . அயலார்க்கு ஆபத்து ஏற்படலாம். அவ்வேளையில் இதில் கூறிய வழிகளை ஒட்டி உதவிசெய்யவேண்டும். இக் நூலைத் தமிழுலகம் நன்கு வரவேற்குமென எண்ணுகின் றேன். இந் நூ லிற் கு அணிந்துரை அளித்துள்ள அன்னயாருக்கும் அன்புப் பெரியார்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி. =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/10&oldid=872698" இலிருந்து மீள்விக்கப்பட்டது